புவனகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரியில் DahNAY பிரைவேட் லிமிடெட் சென்னை நிறுவனத்தின் சார்பாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புவனகிரி (மேற்கு) ஊ.ஒ.ந.நி.பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட திட்ட அலுவலர் சரவணகுமார் தலைமையில் செல்வி இலட்சுமி வட்டார கல்வி அலுவலர்கள், சீ. பூங்கோதை வட்டார வள மைய மேற்பார்வையாளர் காந்திமதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், த சத்தியநாராயணன் புவனகிரி (மேற்கு) ஊ.ஒ.ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக முரளி பாபு CEO கலந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.4,75,000/- மதிப்புள்ள உதவி உபகரணங்களை வழங்கினார். புவனகிரி ஒன்றியத்தில் அரசு பள்ளியில் உள்ள 50 மாற்றுத்திறன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

நிகழ்ச்சியை ஆசிரியர் பயிற்றுநர் மா. ஏழுமலை ஒருங்கிணைப்பு செய்தார். நிகழ்ச்சியில் புவனகிரி ஒன்றிய ஆசிரியர் பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர், இயன்முறை மருத்துவர், சிறப்பாசிரியர்கள், கணினி விவரப்பதிவாளர், கணக்காளர்கள், பள்ளி ஆயத்த மைய பாதுகாவலர் மற்றும் உதவியாளர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *