திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது….

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன். சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மதுரை மாநகர் களைகட்டியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை பெற்றுவரும் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது.

நேற்று காலையில் சப்பரத்தில் சுவாமி. அம்மன் வீதி உலா நடந்தது.
அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட் டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, பின்னர் சுந்தரேஸ்வரரிடம் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சுவாமியாக சந்தோஷ் பட்டர் மகள் அருளேஷ் என்ற சந்திரசேகர், அம்மனாக செந்தில்நாதபட்டர் மகன் மிருத்யுஞ்சயன் என்ற சுவாமிநாதன் ஆகியோர் வேடம் தரித்து நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம்.

அலைமோதியது மேலும் மீனாட்சி திருக்கல்யாணத் திற்காக மாப்பிள்ளை அழைப்பும் கோவிலுக்குள் நடந்தது. அப்போது பலவேறு சீர்வரிசைகள் பெண் வீட்டினர் சார்பில் வழங்கப்பட்டன.

சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யா ணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாணமண்டபத்தில் இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநா டுகளில் இருந்து வரவழைக் கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. மீனாட்சி அம்ம னுக்கு மங்கல நாண் சூட்டும் போது வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேஸ் வரரும். மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வருவர். பின்னர் சுவாமி முத்து ராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக வந்து திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.

காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லகனத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் காட்சி திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இரவு 7.30 மணிக்கு சுந்தரேஸ்வரர் யானை வாகனத்தி லும், மீனாட்சி அம்மன் அனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்தனர்.

மீனாட்சி திருக்கல்யாணத்தை பக்தர்கள்
காண்பதற்கு வசதியாக வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதிகளில் தகர பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. இங்கு வெப்பத்தை தணிக்க 300 டன் வரை குளு, குளு ஏ.சி. வசதி செய்யப் பட்டிருந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தண்ணீர் பாட்டில், பிரசாத பை வழங்கப்பட்டது.

பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பெரிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. அகன்ற திரைகள் வைக்கப்பட்டிருந்தன.”.
மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வருகை தந்த பக்தர்கள் இன்று காலை 5 மணி முதல் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவு வாசல்களில் பரிசோதனைக்கு பின்பு கோவிலுக்குள் செல்ல அனும் திக்கப்பட்டனர். பக்தர்கள் எப்பொருட்களையும் (செல்போன் உட்பட ) எடுத்து வர அனுமதி தரவில்லை. தெற்கு கோபுர வாசல் வழியாக இலவச அனுமதியும், மேற்கு கோபுர வாசல் வழியாக முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள். கட்டளைதாரர்கள் மற்றும் அரசு நிர்வாக அதி காரிகளும், ரூ.500 மற்றும் ரூ.200 கட்டண சீட்டு பெற்றுள்ள பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாகவும் கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பக்தர்கள் மேற்கு மற்றும் வடக்கு ஆடி வீதிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் அமர்ந்திருந்தனர். திருக்கல்யாணம் முடிந்த பின்பு பக்தர்கள் வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வழியாக வெளியே வந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *