கொடைக்கானல் வனப்பகுதியில் தீயணைப்பு பணிகள் மூன்றாவது நாளாக 3 /5/ 2024 அன்றும் மேற்கொள்ளப்பட உள்ளதால் வாகன போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தொடரும் மாவட்ட ஆட்சித் தலைவர் மொ. நா. பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சாலையில் மன்னவனூர் மற்றும் பூம்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருவதை தடுக்கும் வகையில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சார்பில் 1/5/2024 அன்று முதல் தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதை முன்னிட்டு வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்கள், தண்ணீர் டேங்கர் வாகனங்கள் எளிதாக போக்குவரத்து சிரமம் இன்றி செல்வதற்கு வழிவகை செய்யும் வகையில் பூம்பாறை ஜங்ஷன் முதல் மன்னவனூர், கூக்கள் சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் 01/05/2024 காலை முதல் 02/05/2024 இரவு வரை இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது

என்றும் மற்றும் கூக்கள் பகுதி கிராமங்களில் வசிக்கும் உள்ளூர் பகுதி பொதுமக்கள் வாகனங்களில் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை என ஏற்கனவே முன்னறிவிப்பு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வனப்பகுதியில் தீயணைப்பு பணிகள் 3/5/2024 அன்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளதால் மேற்கண்ட போக்குவரத்து மாற்றம் 3/5/2024 அன்றும் தொடர்ந்து அமல்படுத்தப்பட உள்ளது, என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ. நா. பூங்கொடி தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *