மதுரை மாவட்டம் சமயநல்லூரில் கோடைகால நீர் மோர் பந்தலை முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினர்
.இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.எ.க்கள் மாணிக்கம் கருப்பையா. மாநில நிர்வாகி ராஜேஸ்கண்ணா. ஒன்றிய செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன் கொரியர் கணேசன்.
.சமயநல்லூர் ஊராட்சி தலைவர் மலையாளம். மகளிர் அணி மாவட்ட செயலாளர் லெட்சுமி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

அப்போது சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமார் செய்திகளுக்கு அளித்த பேட்டியில்.;

தமிழகமே கொலைகார நகரமாக மாறிவிட்டது காங்கிரஸ் மாவட்ட தலைவர் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை ,உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

தற்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உயிர் பறிபோன பிறகு இந்த கொலையாளியை பிடிக்க தனிப்படை என்று திமுக அரசு கூறி வருகிறது.
அது மட்டுமல்ல  மணல் கடத்தலை தட்டி கேட்ட விஏஓ படுகொலை செய்யப்பட்டார் ,மணல் கடத்தல் தொடர்பாக தான் கூறியதால் எனக்கு பாதுப்பு வேண்டும் என்று ஆடு மேய்க்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்ததால் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுபடி அவருக்கு துப்பாக்கி ஏந்தி காவலர்கள் உள்ளனர்

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது தமிழக மக்களே அச்சத்தில் உறைந்து உள்ளனர்.மக்களுக்கு உயிருக்கு உத்தரவாத இல்லாத நிலை உள்ளது மேலும் தமிழகத்தில் நடைபெறும் கஞ்சா மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பாக  மாவட்ட வாரியாக சட்டமன்றத்தில் அதிமுக. எதிர் கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார் அப்போது ஆளும் திமுக அரசு எந்த பதிலும் கூறாமல்
கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதுபோல் இருக்கிறது.

அந்த கும்பகர்ணன் கூட ஆறு மாதம் தூங்குவான், ஆறு மாதம் விழித்து விடுவான் ஆனால் இந்த அரசு விழிக்காமல் செயல்படாமல் உள்ளது

என குற்றம்சாட்டி விட்டு உலகயளவில் குற்றசெயல்களை கண்டுபிடிபதில் இரண்டாம் பிடித்துள்ள தமிழக காவல் துறையே கோமா நிலையில் உள்ளது.
தற்போதுநாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகள் ,சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடைபடிப்பிற்கு  தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்காக இந்த மாணவ சேர்க்கையாக நீட் தேர்வு நடைபெற்று வருவது.

தமிழகத்தில்  ஒன்னரை லட்சம்  மாணவர்கள் எழுகிறார்கள் நீட் தேர்வில் இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் 7.5 இட ஒட்டிக்கீட்டு அதிமுக அரசு கொண்டு வந்ததது.. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டக்கனியாக இருந்த நீட் தேர்வை இதயக்கனியாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் பழனிசாமியாவார்.

நீட் இரத்துக்கு ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின்,ஒரு கோடி கையெழுத்தை பெற்று அதை எங்கே குப்பை கூடத்தில் வீசி விட்டார்.

மேலும் நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது வெளியிடப் போகிறார் அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா? என கேள்வி எழப்பினார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *