ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வழியில் நாகர்கோவில் வரை செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.சாலையின் இரு பகுதிகளிலும் பல்வேறு கிராமங்கள் உள்ளன, இதே சாலையில் ஏர்வாடி தர்கா,உத்தரகோசமங்கை ஆகிய முக்கியமான சுற்றுலா தளங்களும்,இருப்பது குறிப்பிட தக்கது.

ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி சுற்றுலா செல்லக்கூடிய வாகனங்களும், தூத்துக்குடி நாகப்பட்டினம் கடல் உணவு நிறுவனங்களின் வாகனங்களும் தொடர்ச்சியாக செல்லக்கூடிய சாலையாக இது அமைந்துள்ளது.

ஆகையால் இந்த சாலையானது காலை மாலை இரவு என இரு சக்கர வாகனங்களும் கனரக வாகனங்களும் செல்லக்கூடிய பரபரப்பு நிறைந்த சாலை என்பது ராமநாதபுரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நன்றாக தெரியும்.

இந்நிலையில் குறிப்பாக ஏர்வாடியில் தொடங்கி சிக்கல் ஊராட்சி வரை இருசக்கர வாகன ஓட்டிகளை கையோடு சுடுகாட்டுக்கு கொண்டும் செல்லும் மரண குழிகள் நிறைந்து காட்சி தருவது நெடுஞ்சாலை துறையின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது.
எப்படா!! எவண்டா!! விழுவான் என்று ஏங்கி தவிக்கும் மன நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை அந்த குழிகளை கண்டும் காணாமலும் உள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் குறைவில்லாத விபத்துகள் நடந்து கொண்டிருக்கிறது மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திற்கு மன மகிழ்ச்சியாக இருக்குமோ!! எப்படா விபத்து நடக்கும் என்று காத்து இருக்கின்றார்களோ!! என்று
இதனைத் தொடர்ந்து கவனித்து வரும் அந்த பகுதி மக்கள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர்…

மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குழிகளை மூடி விபத்துகளை தவிர்த்து மக்கள் நலன் காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்….

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *