புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு சாலை நீண்ட காலமாக பழுதடைந்து காணப்பட்டது
இதனால் அந்தப் பகுதியில் இயங்கி வந்த அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் சென்று வந்தது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரூராட்சி பொது நிதியில் இருந்து 19.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது
அதனைத் தொடர்ந்து இன்று சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது