கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
இரா. இராஜாராம் அறிவுரையின்பேரில், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு தலைமையில், மாநகரில் உள்ள டிஜிட்டல் பிரிண்டர்ஸ் கடை உரிமையாளர் மற்றும் மேலாளர்களை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் காவல்துறையினரின் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் போர்டு பிரிண்ட் அடித்து கொடுக்க வேண்டும், மாநகராட்சி அனுமதிக்கப்பட்ட இடங்களின் மட்டுமே டிஜிட்டல் பேனர்களை வைக்க வேண்டும் எனவும், மாநகராட்சி அனுமதிக்கப்படாத இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது டிஜிட்டல் போர்டு அடிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தகவல் கூற வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜசேகரன், புதுநகர் உதவி ஆய்வாளர் கதிரவன் மற்றும் ராஜ் ஸ்டிக்கர், விநா டிஜிட்டல், அன்பு ஆர்ட்ஸ், ப்ரண்ட்ஸ் டிஜிட்டல், ஹைடெக் டிஜிட்டல், வசந்த் டிஜிட்டல், அன்பு ஸ்டிக்கர்ஸ், தங்கம் டிஜிட்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர்
சி கே ராஜன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *