கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம் புலயகுளம் பகுதியில் புலியகுளம் சாரதா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.
கோவை மாவட்ட மேடை மெல்லிசை கலைஞரின் நல சங்க தலைவர் சாமுவேல் ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைத் தலைவர் புலானந்தன் செயலாளர் மார்ட்டின் துணைத் தலைவர் ஆனந்த் அருள் தாஸ் பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
இதில் சிறப்பு விருந்தினர்களான பி எஸ் ஜி ஹாஸ்பிடல் டாக்டர் ஜே எஸ் புவனேஸ்வரன், லயன்ஸ் சண்முகசுந்தரம், எஸ் எஸ் குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் இன்ஜினியர் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவகணேஷ், கோவை மாவட்ட நடிகர் சங்க தலைவர் அஜ்மீர் சாகுல் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் கூட்டத்தில் சங்க வரவு செலவு கணக்கு மற்றும் நிர்வாகிகளுக்கு இன்சூரன்ஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது