துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் ராமராஜீ ரெட்டியார் விஜயா அம்மாள் நினைவுத்திடலில்30-10-2025 அன்று சிக்கத்தம்பூர் பாளையம் தெய்வத்திரு ராமராஜீ ரெட்டியார்-விஜயா அம்மாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்க சார்பில் சங்கத் தலைவர் ஆர்.சரவணன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் செயலாளர் என்.அரவிந்தன், பொருளாளர் எம்.ஜெகதீஸ்ரவன் (எ) இளையராஜா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.இதில் மாவட்ட ஆளுநர் ஜெ.கார்த்திக் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெ. அரவிந்தன் , மண்டல பொறுப்பாளர்கள்,ஜீ.பாபு,ராஜா சிதம்பரம், மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், முருகானந்தம், சந்தோஷ், அசோக் பெரியசாமி ஆகியோருக்கு கலந்து கொண்டு சுமார் 700 பயனாளிகளுக்கு
சேலை,குடை, ஆடு, கோழி,போர்வை,விவசாயிகளுக்கு ஸ்பிரேயர், மாணவர்களுக்கு வாட்டர் பாட்டில்,முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள்,கர்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மரக்கன்று,ரெயின் கோட், விவசாயிகளுக்கு தார்பாய் உள்ளிட்ட நல திட்டங்கள் வழங்கப்பட்டது.
சிறந்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் துறையூர் ரோட்டரி சங்கம், திருச்சி சக்சஸ் ரோட்டரி கிளப் மற்றும் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்க நிர்வாகிகள், சுந்தர்ராஜ், கிருபா, முகுந்தன்,ராம்குமார், நாகராஜ்,மதன் பாபு, மகேஸ்வரன் ,விஜயகுமார், பாஸ்கர் , பத்மநாபன், சுரேஷ்குமார்,ரஞ்சித், வீரப்பன் ,சௌந்தர்ராஜன், முரளி உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவை தொடர்ந்து உப்பிலியபுரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்