திண்டுக்கல் மாவட்டம் மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க தலைவராக கே.சி. பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து சங்கம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தொடர்ந்து மர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காப்பீடு திட்டம், வைப்புத்தொகை, பாதுகாப்பு நிதி, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்ட அம்சங்களை தலைவர் தலைமையில் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன..
இந்நிலையில் மாவட்ட மரவியபாரிகள் மற்றும் விவசாய சங்க செயலாளராக பழனி சிவா மாவட்டத் துணைத் தலைவராக ஜெயராஜ் மாவட்ட இணைச்செயலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை நியமனம் செய்து அறிவிப்பு செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் கீழ் மர வியாபாரிகள் சங்கம் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் திட்டங்களையும் செய்துவரும் நிலையில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து சங்கத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்வதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பழனி சிவா தலைமையில் வியாபாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து மாவட்ட தலைவர் கே.சி.பட்டியை சேர்ந்த ஐயப்பனுக்கு மாலை அணிவித்து சால்வை போர்த்தி மதிப்பு செய்தனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் மாவட்ட மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்…