கோவையில் அதிக உடல் எடையை அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகளுடன் குறைக்க உலக தரம் கொண்ட சிகிச்சைகள் வழங்கும் மைனஸ் கிளினிக் கோவையில் துவக்கம்
பிரபல நடிகை பிரியா ஆனந்த் துவக்கி வைத்தார்
அதிக உடல் எடையுடன் உள்ளவர்கள் தங்கள் உடல் எடையை குறைத்து, தன்னம்பிக்கை தரும் வடிவமைப்பை பெற உதவும் அதிநவீன சிகிச்சைகளை வழங்கும் நிறுவனமான ‘மைனஸ் கிளினிக்’ கோவையில் அதன் முதல் கிளினிக்கை திங்கள் அன்று துவங்கியது.
இந்த புது கிளையை பிரபல திரைப்பட நடிகை பிரியா ஆனந்த் துவக்கி வைத்தார். இது கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கிழக்கு பெரியசாமி சாலையில், ஜாவேரி பிரதர்ஸ் நகைக்கடைக்கு அருகே அமைந்துள்ளது.
எஸ்.எஸ்.வி.எம் குழும நிறுவனங்களின் அறங்காவலர் திரு. மோகன்தாஸ் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர். மணிமேகலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்தத் துவக்க விழாவில் கலந்துகொண்டனர். மைனஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜே. சரண் வேல் இதில் கலந்து கொண்டார்.
பாதுகாப்பான முறையில் ஒல்லியான உடல் அமைப்பை வழங்க ஐரோப்பா மற்றும் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் அதிநவீன உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை மைனஸ் நிறுவனம், கோயம்புத்தூருக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த உலகளாவிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சைகள் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒல்லியாகும் சிகிச்சையானது முகம் முதல் கழுத்து, கைகள், வயிறு, தொடை மற்றும் பின்புறம் வரையிலான பகுதிகளில் சிகிச்சையளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையானது, வாடிக்கையாளரின் உடல் ஆரோக்கிய நிலையை மதிப்பிட்டப் பிறகு, முதலில் உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்தும். கொழுப்பு குறைந்த பிறகு, தோலை இறுக்குதல் (tightening), உடல் வடிவத்தை செதுக்குதல் (sculpting) மற்றும் டோனிங் (toning) ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும்.
மைனஸ் நிறுவனம் அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை அல்லாத மற்றும் மிகக் குறைந்த ஊடுருவல் கொண்ட (minimally invasive) ஒல்லியாகும் நடைமுறைகளை வழங்குகிறது. இந்த சிகிச்சைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மேம்பட்ட, பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக அமையும் படி உருவாக்க பட்டுள்ளது எனவும் இவை அனைத்தும் அமெரிக்க நாட்டின் FDA-அங்கீகாரம் பெற்றவை என்றும் கூறப்பட்டுள்ளது.
நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவுமுறை மற்றும் பயிற்சிகளைப் வாடிக்கையாளர்கள் பின்பற்றினால், இதன் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கும். இந்த பிராண்ட், கோயம்புத்தூரின் மற்ற பகுதிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரைவாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.