திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேட்டி
திருவாரூர், நவ.4- திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர் இளவரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் வாக்காளர்கள் தொடர்பான சரியான தரவுகளை எவ்வாறு உறுதி செய்வது பிஎல்ஏ 2 மற்றும் பிடிஏ ஆகியோரின் குறிக்கோள்கள் மற்றும் பொறுப்புகள் என்னென்ன, வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது, எஸ்ஐஆர் என்று சொன்னால் திமுகவிற்கு பயம் தொற்றி கொண்டு விடுகிறது. எஸ்ஐஆர் ஆதரிப்பதற்கு பாஜக காரணம் இல்லை.இறந்தவர்களின் வாக்கை வைத்து ஆட்சிக்கு வந்தது திமுக. எஸ்ஐஆர் தொடர்பாக பீகாரில் சொன்னது சரி. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறவர்கள் திமுக. அதிமுகவினர் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் திமுகவினர் ஏமாற்றி விடுவார்கள். திமுகவின் பதட்டமெல்லாம் திருட்டு ஓட்டு போட முடியாது என்பது தான். ஒரிஜினல் ஓட்டு வந்தால் அதிமுக வெற்றி பெற்றுவிடும். அதற்கு அதிமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் உழைக்க வேண்டும்.
இவ்வாறு இரா.காமராஜ் எம்எல்ஏ பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது, அதிமுக கூட்டணி பலமாக உள்ளது என்பது போகப் போக தெரியும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மக்களும் தெளிவாக இருக்கின்றனர். அதனால், யார் வந்தாலும் இந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும். எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராக வருவார். அதிமுகவில் குடும்ப அரசியல் என்று செங்கோட்டையனுகாகு
இவ்வளவு நாட்கள் தெரியவில்லையா?
கடந்த எட்டே முக்கால் ஆண்டு காலமாக அதிமுகவை பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வழிநடத்தி வருகிறார். அதிமுகவையும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் காப்பாற்றி இருக்கிறார். அதனால் அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் பழனிசாமியின் பக்கம் நிற்கிறார்கள்.
யாரும் அவரைப் பார்த்து பொறாமை படக்கூடாது. கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளார். நடவடிக்கைகள் சரியான நடவடிக்கைகளாகத்தான் இருக்கும். இயக்கத்துக்கு உள்ளேயே இருந்து கொண்டு தேவையில்லாதவற்றை பேசினால், இந்த இயக்கம் பெரும் பாதிப்பை சந்திக்கும்.
அவர் சீனியர் என தெரிவிக்கிறார். நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு இது நேரமா?. தேர்தல் நேரத்தில் எல்லோரும் சேர்ந்து இயக்கத்தை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பது அனைவரின் கடமை. அந்த கடமையிலிருந்து செங்கோட்டையன் தவறி விட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இதைப் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது கட்சியின் பொதுச்செயலாளர் நடவடிக்கை எடுக்கின்றார். இது சரியான நடவடிக்கை. அப்போதுதான் கட்சியை கட்டுப்பாடாக கொண்டு செல்ல முடியும்.கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி ஏற்கனவே தெளிவாக அறிவித்து விட்டார். அதிமுக பாஜக கூட்டணி பலமாக இருக்கிறது. இவ்வாறு இரா.காமராஜ் எம்எல்ஏ கூறினார்.