இங்கிலாந்தில் நாடு முழவதும் உள்ளாட்சி தேர்தல் கடந்த மே நான்காம் தேதி நடைபெற்றது செம்ஸ்போர்டு சிட்டியில் ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சியின் சார்பாக தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் பெரும்பண்ணையூர் கிராமத்தைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் அவர்களின் மகன் கவுன்சிலர் வேட்பாளராக பாப்பா வெற்றி அறிவிக்கப்பட்டிருந்தார்

செம்ஸ்போர்டு சிட்டியில் பொறுத்தவரை டெமோகிராட்ஸ் கட்சி மிக பலம் பொருந்திய செலுத்த கூடிய இடத்தில் செம்ஸ்போர்டு சிட்டி கவுன்சிலராக கடின போட்டிகிடையே தற்போதகைய கவுன்சிலில் டெமோகிராட்ஸ் வேட்பாளர் பேட்ரிக் மேன்லி அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் அவர்களின் மகன் பாப்பா வெற்றி 163 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றில் முதல் தமிழ் செம்ஸ்போர்டு சிட்டி கவுன்சில்ராக கான்சேர்வெட்டிவ் கட்சி சார்பாக தடம் பதித்து உள்ளார்

விலைவாசி உயர்வு மற்றும் சில காரணங்களால் ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சி நாடு முழுவதும் ஒரு சிறிய பின்னடைவை சந்தித்த நேரத்தில் பாப்பா வெற்றி அக்கட்சி சார்பாக போட்டி இட்டு செம்ஸ்போர்டு சிட்டி பலம் பொருந்திய கட்சி இன்னும் ஒரு ஆங்கிலேயரே எதிர்த்து வெற்றி பெற்றது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது

பிரிட்டனை ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சி பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும் செம்ஸபோர்டு சிட்டி ரேடியோ கண்டுபிடித்த மார்கோனி பிறந்த ஊர் என்பது குறிப்பிட தக்கது.

என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த செம்ஸ்போர்டு பிரிட்டிஷ் மக்களுக்கும் இங்கு வாழும் இந்திய தமிழ் மக்களுக்கும் நண்பர்ககுக்கும் நன்றி

எல்லை அற்ற மகிழ்ச்சியில் இருந்தாலும் மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற அச்ச உணர்வோடு மக்கள் பாராட்ட கூடிய வகையில் உழைத்து ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சி வரும் காலங்களில் அனைத்து கவுன்சில்லர்கள் வெற்றி என்ற வகையில் என் உழைப்பு இருக்கும்

மற்றும் நான் பிறந்த விவசாய பூமி டெல்டா மாவட்டதிர்ற்கு பெருமை சேர்க்க உழைப்பேன் என்ற அனைவரின் அன்போடு இப்ப பணியை செய்வேன் என்னை படிக்க வைத்து ஆளாக்கிய தாய் தந்தையர் மற்றும் என் மனைவிமகன் நண்பர்கள் அரசியல் ஆசான்கள் மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் பெரும்பான்னையூர் கிராம மக்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றியை தெரிவிக்கிறேன்

நான் சமூகசேவை உழைப்பு என்பதை என் தந்தையை பார்த்து வியந்தத்துண்டு அவரத்தின் வாழ்நாள் அர்பணிப்பில் ஒரு சிறிய பங்காவது நான் பணியாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம் என சிட்டி கவுன்சிலர் பாப்பா வெற்றி தெரிவித்துள்ளார்

திருவாரூரில் 1982 ஆண்டு பிறந்து சென்னை செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் டெக் தகவல் தொழில்நுட்பம் முடித்து , 2007 பிரிட்டன் சென்று ஹெரியோட் வாட் பல்கலைகலகத்தில் மாஸ்டர் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து கவுன்சிலராக முதல் அரசியலில் வெற்றி படிநாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *