திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மே மாதம் உண்டியல் மூலம் ரூ.4.70கோடி வருவாய் கிடைத்துள்ளது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதாந்திர உண்டியல் எண்ணும் பணி இன்று காலை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில், கோவில் இணை ஆணையர் / செயல் அலுவலர் கார்த்திக் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், நிரந்தர உண்டியல் மூலம் ரூ.4கோடியே 65 லட்சத்து 72 ஆயிரத்து 815-ம், கோசாலை பராமரிப்பு உண்டியலில் 46 ஆயிரத்து 475-ம், யானை பராமரிப்பு உண்டியலில் 1 லட்சத்து 9ஆயிரத்து 543-ம், உப கோயிலான சிவன் கோவில் உண்டியலில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 371-ம், வெயிலுகந்தம்மன் கோவில் உண்டியலில் ரூ.52 ஆயிரத்து 299-ம் என மொத்தம் ரூ.4 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 505 மே மாதம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
மேலும் தங்கம் 2910 கிராமும், வெள்ளி 42,750 கிராமும், 977 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில், உதவி ஆணையர் தி.சங்கர், ஆய்வர்கள் மு.பகவதி, மு.முருகன், சிவகாசி பதினெண் சித்தர் மடம், குருகுலம் வேதபாடசாலை உழவாரப் பணிக்குழு, தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக்குழு, பொதுமக்கள் பிரதிநிதிகள், அயல்பணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *