தமிழக அரசு மத்திய அரசை பின்பற்றி மிகப்பெரிய மோசடி சட்டமான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 உடனடியாக கைவிட வேண்டும் இல்லை என்றால் மிக தீவிர போராட்டத்தில் களமிறங்குவோம் பிஆர் பாண்டியன் மன்னார்குடியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . காவிரி டெல்டாவில் வடசேரி , மைக்கேல் பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகிய இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் தொடர்ந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டோம் .

உடனடியாக பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், கை விடுவதற்கான அறிவிப்பானை வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது ஆனால் ஒரு மாதம் கடந்த நிலையில் அது குறித்தான அறிக்கை இடம்பெறவில்லை.

இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி மன்னார்குடியில் டெல்டா தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரத போராட்டம் மூலமாக உடனடியாக அறிவிப்பானை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினோம்.

தற்போது நிலக்கரி சுரங்கம் அமைக்கிற திட்டம் காவிரி டெல்டாவில் மைக்கேல் பட்டி , வடசேரி , சேத்தியாதோப்பு கிழக்கு ஆகிய மூன்று இடங்களிலும் நிலக்கரி தோன்றுவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் டென்டரில் இருந்து பட்டியல் நீக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது இது விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

தமிழக அரசு மத்திய அரசை பின்பற்றி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தையே குழி தோண்டி புதைக்க கூடிய மிகப்பெரிய மோசடி சட்டமான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 உடனடியாக கைவிட வேண்டும் இல்லை என்றால் தமிழக முழுவதும் ஒட்டுமொத்த விவசாயிகளை ஒன்று திரட்டி தீவிரமாக போராட்டத்தில் களமிறங்குவோம் என நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *