தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்
சென்னை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் அக்டோபர் 7 2001 ஆம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதல் முறையாக குஜராத் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றார்,
தொடர்ந்து மூன்று முறை குஜராத் முதலமைச்சராகவும்,மூன்று முறை பாரத பரதமராகவும் பொறுப்பேற்று இன்றோடு 25 வருடங்கள் பொதுவாழ்க்கை நிரைவடைந்த நிலையில் அதனை கொண்டாடும் விதமாக சண்முகம் சாலையில் பிரதமர் மோடி அவர்களின் சிறப்புரை காணொளி முலம் திரையிட்டு காட்டினர்.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட வடக்கு பா.ஜ க சார்பில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் தாம்பரம் சண்முக சாலையில் இருந்து கையில் ஜோதி ஏந்திய படி பாஜக கொடியுடன் வந்தேமாதரம் கோஷங்கள்யிட்டபடி பேரணியாக சென்றவர்கள் தாம்பரம் பேருந்து நிலையத்திற்க்கு வந்தடைந்தனர்,
பின்பு 2047 ல் வளர்ச்சியடைய உள்ள இந்தியாவை உருவாக்க நாம் நமது பங்களிப்பு மற்றும் அர்பணிப்பை வழங்குவோம் என்று உறுதி மொழியை ஏற்றுகொண்டனர். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராம் சிறப்பு விருந்தினராக மாநில துனைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர் மீனாட்சி நித்யா சுந்தர், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட பொதுசெயலாளர் தென்னரசு உட்பட பாஜக நிர் வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்