தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஆக- 8. தஞ்சாவூர் ரயில்வே நிலைய இரண்டாவது நுழைவு வாயில் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கோவில் வடிவமைப்புக்கு கீழே தஞ்சாவூர் சந்திப்பு என்று ஹிந்தி எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதற்கு இடதுசாரிகள் பொது மேடை மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் நேற்று 7/10/26 மாலை 6 மணிக்கு ஒன்று கூடி இரயில்வே தலைமை நிலைய அதிகாரியிடம் பேச்சு வார்த்தை நடத்திய உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன், மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ் முதல்வன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ், என்.டி.எல்.எஃப் மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமணன், போக்குவரத்து சங்க ஏஐடியுசி நிர்வாகி பி.ராமச்சந்திரன், விசிறி சாமியார் முருகன் மற்றும் ரயில்வே நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் தோழர்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் உடனடியாக இந்தி பெயர் பலகை அகற்றப்படுவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இந்த நிலையில் இன்று 8/10/26 காலை நாடாளுமன்ற உறுப்பினர் தஞ்சாவூர் ரயில்வே நிலையம் வருகை தந்து ஆய்வு செய்த போது இந்தியில் எழுதப்பட்டுள்ள பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. இதற்கான முன்னெடுப்பை எடுத்த திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அனைத்து கட்சிகள், இயக்கங்கள், காவல் துறையினர், செய்தியாளர்கள், ரயில்வே நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து.