நாமக்கல் அடுத்துள்ள வலையபட்டியில் தமிழ்நாடு சிப்காட் தொழில் பேட்டை எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் , பொதுமக்கள் தமிழக விவசாய முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் கே பாலசுப்பிரமணியன் தலைமையில் சிப்காட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் ஆகியோர்கள் இணைந்து தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பால் குடம் எடுத்து நடைபயணம் வந்து நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வளையப்பட்டி ஆண்டாபுரம் பரளி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக தமிழக அரசு சிப்காட் தொழில் பேட்டை அமைக்க உள்ளது

இதனை எதிர்த்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயம் முன்னேற்ற கழகம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை பல கட்ட போராட்டங்களை நடத்தினர் இருப்பினும் இதற்கு செவி சாய்க்காத நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து சிப்காட் அமைப்பு குறித்து விவசாயிகளை அழைத்துப் பேசவில்லை ஆனால் இது தொடர்பான தொடர்பாக பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது

இந்த நிலையில் இன்று இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நாமக்கல் திருச்சி சாலை வலையப்பட்டியில் இருந்து நாமக்கல் வரை பேரணியாக எதிர்ப்பு தெரிவித்து பால்குடம் எடுத்து வந்து தாங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்

பின்பு பால்குடம் எடுத்து வந்த பெண்கள் சிப்காட் அமைக்க வேண்டாம் வேண்டாம் என கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்

பிறகு ஆஞ்சநேயரிடம் சிப்காட் அமையக்கூடாது என்பது கோரிக்கை வைத்து பால் குடங்களை ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர்

இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாயிகள் மற்றும் விவசாய முன்னேற்ற கழகம் உறுப்பினர்கள் பெண்கள் திரளாக பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *