மதுரையில் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு விழா…..
இலங்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தலைமையேற்று சாம்பியன் பட்டம் பெற்ற மதுரை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா மற்றும் சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி மற்றும் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி மூலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற ஆறாவது இந்தியன் ஓப்பன் பாரா தடகள போட்டியில் நளினி குண்டு வட்டு எறிதலில் தங்கப்பதக்கமும் முனியசாமி குண்டு எறிதலில் வெள்ளி பதக்கமும், சுதாகர் குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்
அந்த வீரர்களுக்கு மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பாரா தடகள விளையாட்டு வீர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.