புதுக்கோட்டை
ஆதிதிராவிடர் பழங்குடி நலத்துறை மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் தமிழக அரசின் முடிவை திரும்ப பெறக் கோரி கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பள்ளி பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் உருமண் தலைமை வகித்தார் ‌

தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம் மாநில தலைவர் திருக்குமரன் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி அபெகா பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயராமன் பிலாவிடுதி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தின் நோக்க உரையை தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் அவர்கள் நோக்க உரையாற்றினார்.


தமிழ் மக்கள் புரட்சிக் கழகத்தின் மாநில தலைவர் குணசேகரன் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் உடந்தை அரசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் முல்லூர் தியாகு தமிழ் மக்கள் புரட்சி கழகம் மாவட்டச் செயலாளர் வேம்பை சின்னதுரை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் குமரேசன் ஜாக்டோ ஜியோ புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆசிரியர் விமல் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர் ஆனந்தன் மாவட்ட செயலாளர் இளமுருகு ஆசிரியர் பரிபூரண மரியனேசன், ஆசிரியர் அகிலன், காப்பாளினி இந்திரா காந்தி ஆசிரியர் ஜெயந்தி, அருந்ததி, உடையான், வசந்தகுமாரி ஆசிரியர் சிவக்குமார் பிலாவிடுதி உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குணசீலன் ஆகியோர் ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்க கூடாது எனவும் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசின் கொள்கை முடிவை மாற்றி தனி அலகாக செயல்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் இணை இயக்குனர்கள் என உருவாக்கி பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் செயல்படுவது போல் தனித் தன்மையோடு இயங்க வேண்டும் எனவும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகள் தனி அலகாக தரம் உயர்த்தப்பட்டு உரிய நிதியினை அரசு வழங்கி சிறப்பு அந்தஸ்துடன் இயங்கிட வேண்டும் எனவும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களில் ஏவலர் காவலர் சமையலர் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் எனவும் பட்டியல் சமூக மக்களுக்கு 1996 ஆம் ஆண்டில் பின்னடைவு காலி பணியிடங்களை கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை சிறப்பு நிபந்தனைகளின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சியில் நிரப்பப்பட்டது. அதன் பிறகு இன்று வரை பட்டியல் இன மக்களுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை அறிவிப்பு செய்யாமலும் நிரப்பப்படாமலும் உள்ளது. மேலும் தமிழக அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும்
நலத்துறை பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியினை அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் கழிப்பறைகள் கட்டித் தர வேண்டும் எனவும் மத்திய அரசு ஒதுக்கக்கூடிய நிதியினை திரும்ப அனுப்பக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர். கூட்டத்தில் 150 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பள்ளிகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார் . நிறைவாக மாவட்ட தலைவர் விவேக் அவர்கள் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *