ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது

திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவர்க்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு 198 கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்துள்ளனர் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களில் 3 கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்

அதனைத்தொடர்ந்து மாற்றத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிநலத்துறையின் சார்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் இயற்கை மரணம் ஈமசடங்கு உதவித்தொகைமூன்று சக்கர சைக்கிள் காதுக்கு பின் அணியும் காதொலி கருவி, இலவச பேருந்து பயண சலுகை அட்டை, கண் கண்ணாடி என நான்கு லட்சத்து 39 ஆயிரத்து 630 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் ஏழு நபர்களுக்கு .3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்

கூட்டத்தில்மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதாமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர்மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாமாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் புவனா பொது மேலாளர்மாவட்ட தொழில் மையம் திரிபுரசுந்தரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *