கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரியாணிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி ராதிகா அனைவரையும் வரவேற்றார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா உலக சைக்கிள் தினம் குறித்து பேசியதாவது உலக மிதிவண்டி நாள் ஆண்டுதோறும் சூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் “இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி” என்பதை அங்கீகரித்தது.
ஒரு காலத்தில் போக்குவரத்துக்கு முக்கியச் சாதனமாக இருந்த மிதிவண்டி, தற்போது பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாக மாறிவிட்டது. சமீபகாலமாக மிதிவண்டி பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.

                                                                                                                                                                                                அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். இம்முயற்சிக்கு துருக்மெனிஸ்தான் உட்பட 56 நாடுகள் ஆதரவளிக்க முன்வந்தன. மிதிவண்டி மனித இனத்திற்குச் சொந்தமானதென்றும் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு சாதனம் என்பதே இப்பரப்புரையின் முக்கிய நோக்கமாகும்.                                                                                                                                                                                 

உலக மிதிவண்டி நாள் இனம், மதம், பாலினம், வயது, அல்லது வேறு எந்த குணவியலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களாலும் அனுபவிக்கும் உலகளாவிய இயந்திரம் ஆகும். உலக மிதிவண்டி நாள் தற்போது வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டு வருகிறது என்று பேசினார் . மாணவர்கள் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிறைவாக தன்னார்வலர் காயத்ரி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *