ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்

பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உடனிருந்தார்பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது பொதுவாக குழந்தைகளில் ஒரு பிரிவினர் ஊதியம் பெற்றோ அல்லது ஊதியம் பெறாமலோ உழைப்பில் பங்கெடுத்தல் என்ற முறையே குழந்தைத் தொழிலாளர் என வரையறுக்கப்பட்டுள்ளதுகுழந்தை தொழிலாளர் என்பவர் ஆறு வயதிலிருந்து 14 வயது வரை பகல் வேலையில் பள்ளிக்கு செல்லாமல் உழைக்கும் குழந்தை மற்றும் ஒரு வேலை அளிப்பவரிடம் வேலை செய்வதை குறிக்கும் இது ஒரு சமூக கொடுமைஉலகிலேயே இந்தியாவில் தான் அதிகமான குழந்தைத் தொழிலாளிகள் இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறது.
ஒரு குழந்தை வருவாய் பெறுவதற்காக பல்வேறு வகையான செயல்களில் ஈடுபடுத்தப்படலாம் தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டோ குழந்தைகள் வேலைகளில் அமர்த்தப்படலாம். அமைப்பு சார்ந்த தொழிலிலோஅமைப்பு சாராத தொழிலிலோ ஈடுபடுத்தப்படலாம் கம்பளம் நெய்தல் தீப்பெட்டித் தொழிற்சாலை, பட்டாசு தொழிற்சாலை, பீடி சுற்றுதல்,செங்கல் சூளையில் வேலை செய்தல் பிச்சையெடுத்தல் போன்றைவை குழந்தை தொழிலுக்கான களங்கள் ஆகும்.
குழந்தைத் தொழிலுக்கான காரணங்களானவை ஏழ்மை பெற்றோர்களின் பொறுப்பின்மை, குடும்ப குல தொழில் நடத்துவதற்கு சிறுவயதில் கட்டாயப்படுத்துதல் ஆகும். குழந்தை தொழிலுக்கு எதிராக அரசின் கடுமையான சட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் உருவாவதை தடுப்பதில் அரசு முக்கிய பங்காற்றுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 24வது பிரிவின்படி 14 வயதிற்கு கீழ் உள்ள எந்த குழந்தையும் தொழிற்சாலை மற்றும் சுரங்கம் அல்லது ஆபத்தான வேலைகளில் அமர்த்தக்கூடாது என்பதை கடுமையான சட்டங்கள் மூலம் கட்டாயப்படுத்தப்படுகிறது.
2006 அக்டோபர் 10 ஆம் நாள் முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வீட்டு வேலையாட்களாகவோ அல்லது தேனீர் கடைகளிலோ மற்றும் சாலையோர உணவக வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதை இச்சட்டத்திருத்தம் தடைசெய்துள்ளது
குழந்தைத் தொழிலாளர் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரகம் காவல்துறை, திருவாரூர், மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம் மேலும் குழந்தைகளுக்கான 24 மணி நேர இலவச அவசர தொலை பேசி எண்ணான 1098 ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.

பேரணியானது திருவாரூர் புதிய இரயில் நிலையத்திலிருந்து பேரணி திருவாரூர் இரயில்நிலையத்தில் துவங்கி பழைய பேருந்து நிலையம், பனகல்ரோடு கீழவீதி, தெற்கு வீதி வழியாக வ.சோ. ஆண்கள் மேல்நிலை பள்ளியினை சென்றடைந்தது பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழி மாவட்ட தலைமையில் அனைத்துதுறை அரசு உயர்அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லதா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன் நகர்மன்ற துணைத்தலைவர் அமுதா சந்திரசேகர்உதவி ஆணையர் தொழிலாளர் நலத்துறை (அமலாக்கம்) வசந்தகுமார் நகராட்சி ஆணையர் பிரபாகரன் வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *