அரசு மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு நாளில் மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வரவேற்றார்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு நாளில் மாணவ, மாணவியர்களுக்கு பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கி வரவேற்றார்

திருவாரூர் மாவட்டத்தில் (12.06.2023) 66 அரசு உயர்நிலைப்பள்ளிகள் 12 உதவிபெறும் உயர்நிலைப்பபள்ளிகள், 78 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 14 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் 76 பள்ளிகள்206 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் 29 உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள் என 481 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகைப்புரிந்த மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் வரவேற்று புத்தகங்களை வழங்கி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அன்றைய பாடங்களை அன்றைய தினமே படிக்க பழகி கொள்ள வேண்டும் கல்வியினையும் விளையாட்டினையும் ஒருங்கே பயில வேண்டும் உடல்நலத்தினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்படிப்புடன் ஒழுக்கத்தினையும் கற்று கொள்ள வேண்டும் பள்ளிக்கும் பெற்றோர்க்கும் பெருமை சேர்ந்திடும் வகையில் கல்வி பயில வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்

நிகழ்வில்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி காட்டூர் ஊராட்சி மன்றத்தலைவர் விமலா பிரபாகரன் பள்ளி தலைமையாசிரியர் ஜீவரேகா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *