பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயங்கொண்டம் வட்டத்திற்கான ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில், 1432-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் முதல் நாளில் தா.பழூர் உள்வட்டம், இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிப்பெருமாள்நத்தம், இடங்கண்ணி, உதயநத்தம் (மேல்பாகம்), உதயநத்தம் (கீழ்பாகம்), அணைக்குடம் (பொற்பதிந்தநல்லூர் உட்பட), தா.பழூர், கோடங்குடி (வடபாகம்), கோடங்குடி (தென்பாகம்), நாயகனைப்பிரியாள், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புக்குடி ஆகிய 15 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டும் இவர்களுக்கு இன்றைய தினமே பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், மீதமுள்ள 260 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இம்மனுக்களை உரிய விசாரணை செய்து தீர்வுகாணவும், கிராம கணக்குகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்குப் பதிவேடுகளை முறையாக பதிவு செய்து பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், ஜெயங்கொண்டம் வட்டத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்; 14.06.2023 அன்று சுத்தமல்லி உள்வட்டத்திற்குட்பட்ட மணகெதி, உல்லியக்குடி, வெண்மான்கொண்டான் (மேல்பாகம்), வெண்மான்கொண்டன் (கீழ்பாகம்), பருக்கல் (மேல்பாகம்), பருக்கல் (கீழ்பாகம்), கோவிந்தபுத்தூர், நடுவலூர் (மேல்பாகம்), நடுவலூர் (கீழ்பாகம்), சுத்தமல்லி, கீழநத்தம், அம்பாபூர், உடையவர்தீயனூர், கடம்பூர், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான் (வடபாகம்), ஸ்ரீபுரந்தான் (தென்பாகம்) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயபாஸ்கர், வட்டாட்சியர் துரை, துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *