பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில்
ஜெயங்கொண்டம் சட்டமன்றஉறுப்பினர் கசொக கண்ணன் அவர்கள்ரூபாய் 36 -லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தையும்,
ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தையும் திறந்து வைத்தார் மேலும் அப்பகுதியில் மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

தொடக்கமாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முத்துசேர்வாமடம் ஊராட்சி, சுண்டிப்பள்ளம் புதுக் காலணியில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியையும், குண்டவெளி ஊராட்சியில் மீன்சுருட்டி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையை ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கும் பணியையும் துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து திருச்சி (நெ) நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஆலத்திப்பள்ளம் ஊராட்சியில் ஆலத்திப்பள்ளம் முதல் ஒடப்பேரி சொக்கலிங்கபுரம் சாலை 0/0 —2/5 வரை ரூபாய் 174.83 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்துதலுக்கான பணியையும் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் சரவணன் (நபார்டு மற்றும் கிராம சாலைகள்), உதவி பொறியாளர் ராஜா, வேளாண்மை செயற்பொறியாளர் குமரகணேஷ், வேளாண்மை உதவி செயற்பொறியாளர் அசோகன், உதவி வேளாண் இயக்குனர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் (பொபது) ஜெயந்தி, வருவாய் மண்டல துணை வட்டாட்சியர் சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், சண்முகம், வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார், குண்டவெளி கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன், வடக்கு ஒன்றிய செயலாளர் தன சேகர், தலைமை ஆசிரியர் (ஓய்வு) கணேசன், குண்டவெளி ஊராட்சிமன்ற தலைவர் ஜெயந்தி. ,ஆலத்திப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி சங்கரன்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்
இரா பாலமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *