மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கஜவரதன். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய அச்சிறுப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்றுள்ளார்.
அப்போது அச்சிறுப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மோகன்
என்பவர் ஆவணங்களை சரி பார்க்காமல் இது உரிய ஆவணம் இல்லை எனக் கூறி விவசாயின் முகத்தில் மனு பேப்பரை தூக்கி எறிந்துள்ளார். மேலும் சம்பந்தபட்ட விவசாயிக்கு மன உளைச்சல்
ஏற்படுத்தியுள்ளார்.
அப்போது விவசாயி கூறுகையில் ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் சரியாக உள்ளது ஆனால் வருவாய் ஆய்வாளர் மோகன் என்னிடம் லஞ்ச பணம் கேட்டார். மேலும் பணம் என்னிடத்தில் இல்லை என்ன கூறிய போது என்னுடைய ஆவணத்தை சரிபார்க்காமல் என் முகத்தில் தூக்கி எறிந்து என்னை அவமானப்படுத்தி வேளியே துரத்தி விட்டார்.
இது குறித்து மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் மோகன் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளார். அந்த மனு மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *