புதுச்சேரி வில்லியனூர் இயங்கும் பிரபத் வாழ்வாதார மையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடியது. HUL மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரி திரு.நிக்கோலஸ் அவர்கள் தலைமையில் பிரபத் மையத்தின் நிறுவன மேலளார் திரு.மணிகண்டன் வரவேற்றார்,

இதில் தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் பனை மரம் எவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது என்ற தலைப்பில் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி நிறுவனர் பூரணங்குப்பம் ஆனந்தன் உரையாற்றினார்,

பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை பிரமிட் தியானம் மூலம் எவ்வாறு தீர்ப்பது என்று பிரமிட் விஞ்ஞானி Dr. வரதராஜன் விளக்கினார். இணைப் பேராசிரியை திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் செல் பேன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகளை விளக்கி கூறினார்.

இதில் டோன்ட் வேஸ்ட் புட் ஸ்டீபன் ராயப்பா, DSC-Society தன்னார்வளர்கள் கோபிநாத், எழிலரசன், ஆகாஷ், ஆகியோர் பங்குபெற்று சிறப்பித்தனர் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை லேபர்நெட் ஊழியர்கள் செய்திருந்தனர். இதில் சுமார் 80 மகளிர்கள் பங்கு பெற்றனர் முடிவில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *