பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கும்பகோணத்தில் கிரிப்டோகரன்சி யில் முதலீடு என சுமார் 7 கோடி ௹பாய் மோசடி செய்த கும்பல் மீது திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக்கிடம் பாதிக்கப்பட்டவர்கள் இன்று தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுத் தரக் கோரி புகார் மனு அளித்துள்ளனர்.

முத்துப்பிள்ளை மண்டபம் முல்லை நகரில் வசித்து வருபவர் அர்ஜீன் கார்த்திக் இவர் மேம்பாலம் அருகில் ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ஒன்றுக்கு ரூ 15000 வீதம் 24 மாதங்கள் வரை வழங்குவதாக கூறி பலரிடம் முதலீட்டை பெற்று நான்கு, ஐந்து மாதங்கள் வரை முதலீட்டார்களுக்கு பணம் வழங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையை சேர்ந்த அமானுல்லா 2 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
மேலும் கமிஷன் அடிப்படையில் இவர் மூலம் சுமார் 921 பேரிடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் சுமார் 7 கோடி ரூபாய் மூதலீட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த நிறுவனத்திடம் சுமார் 8000 பேர் 50,000 ரூமுதல் 5 லட்ச௹பாய் வரை முதலீடு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
அலுவலகம் சென்று பங்கு தொகையை கேட்டு நெருக்கடி கொடுத்த போது, உரிமையாளர் உள்ளிட்டோர் அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டதாக பாதிக்கப்பட்ட அமானுல்லா மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட பலருடன் நேரில் சென்று திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக்கிடம் புகார் மனுவினை அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் பாதிக்கப்பட்டவர்களிடம் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *