கோவை மாவட்டம் வால்பாறையில் புதிதாக உதயமாகியிருக்கும் தமிழக வணிகர் சம்மேளனம் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்தில் வால்பாறை மார்கெட் பகுதியில் உள்ள பெரும்பாலான வாடகைக்கடைகளின் மேற்கூரைகள் சிதிலமடைந்துள்ள மேற்கூரைகளை புதுப்பிக்கவும், ஆளில்லாமல் பூட்டிய நிலையில் இருக்கும் சுமார் 40 க்கும் மேற்ப்பட்ட கடைகளை கையகப்படுத்தி தடையில்லாத வணிகர்களுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அதனால் நகராட்சிக்கு கூடுதலாக வருவாய் ஈட்டவும், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நகராட்சி தூய்மைபணியாளர்களைக்கொண்டு மார்கெட் பகுதியில் ஆங்காங்கே கிடப்பில் போடப்பட்டு வரும் கழிவு குப்பைகளை அகற்றி வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும்,மேலும் தமிழ அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்து பழைய மின்கட்டணத்தையே அமுல் படுத்த நகர்மன்ற கூட்டத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், வாடகைத்தொகைகளை செலுத்தவரும் வணிகர்களின் நலன்கருதி தாமதமின்றி வாடகைத்தொகையை பெற்றுக்கொண்டு உரிய ரசீதை வழங்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நகராட்சியின் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலம் மற்றும் நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.செந்தில்குமார் ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வலியுறுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றவும் கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இக் கூட்டத்தில் அவைத் தலைவர் ஏ.எல்.எஸ்.ராதாகிருஷ்ணன், தொகுச்செயலாளர் எம்.சரவணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் என்.பொன்மலர், தலைவர் ரவீந்திரன், செயலாளர் பி.பரமசிவம், பொருளாளர் எஸ்.அழகன், சட்ட ஆலோசகர் ம.விஸ்வநாதன், எஸ்.ஜோதி, ஏ.பாலமுருகன்,வி.பி.சுரேஷ்குமார், எம்.ஏ.மஜீத், ஏ.இப்ராஹிம், பி.எஸ்.கண்ணன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *