கோவை

ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனத்தில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் 200 பேருக்கு தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனத்தில் பயின்று நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களில் பொது பிரிவில் முதல் 10 இடங்களில் 5 இடங்களை இந்நிறுவன மாணவர்கள் பெற்றுள்ளனர். அதில் விஜயவாடா பகுதியை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

மேலும் வரும் என்ற மாணவர் 715 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி 15 மாணவர்கள் 710 மதிப்பெண்களுக்கு மேலும் 30 மாணவர்கள் 705 மதிப்பெண்களுக்கு மேலும் 55க்கும் மேற்பட்ட மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றுள்ளனர். இதில் 200 மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலையரங்கில் இந்த நிறுவனத்தில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சைதன்யா கல்வி நிறுவன இயக்குநர் சுஷ்மா போப்பானா, தமிழ்நாடு செயல்பாட்டு தலைவர் ஹரிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களையும், நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வருண் என்ற மாணவர் கோவை கிளையில் பயின்று 715 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் ஒன்பதாவது இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *