திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் மழை தண்ணீர் தேங்கும் இடத்தருகே மழைநீர் உறிஞ்சும் செங்குத்து உறிஞ்சி குழி முன்னதாக 10்க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது துவக்கப்பள்ளி வளாக உள்ளிட்ட 4 இடத்தில் மழைநீர் உறிஞ்சும் செங்குத்து உறிஞ்சி குழி அமைக்கப்பட்டுள்ளது.

மழைநீரை சேமிக்கும் விதமாக, ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோவிந்தகுடி ஊராட்சியில் கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டாக மழை தண்ணீர் அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வந்தது.

இந்நிலையில் அந்த பகுதியில் மழைநீர் தேங்கும் இடத்தருகே மழைநீர் உறிஞ்சும் செங்குத்து உறிஞ்சி குழி வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர் ஆகியோர் ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் மணிகண்டனிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து 15-வது நிதிகுழ மானியத்தில் ரூ 82 ஆயிரம் மதிப்பீட்டில் மழைநீர் உறிஞ்சும் செங்குத்து உறிஞ்சி குழி 10க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவிந்தகுடி ஊராட்சியில் மழை காலம் நெருங்குவதை முன்னிட்டு, மழை தண்ணீர் தேங்கும் இடங்கள் ஊராட்சியால் அடையாளம் காணப்பட்டு மேலத்தெரு, தெற்கு தெரு அரசு துவக்கப்பள்ளி வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் மழைநீர் உறிஞ்சும் செங்குத்து உறிஞ்சி குழி பணி 15-வது நிதிகுழ மானியத்தில் ரூ 3லட்சத்து19ஆயிரம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *