கோவை,பீளமேடு பகுதியில் உள்ள பி எஸ் ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு வருடம் பட்டய பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..

நிகழ்ச்சியில் பி எஸ் ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கிரிராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.. விழாவில் சிறப்பு விருந்தினராக,பெங்களூர், டி.வி.எஸ். இன்ஸ்டிடியூட் இயக்குநர், முனைவர் கோவைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,உலகளவில் இந்திய மக்கள் தொகையில் முன்னிலை நாடாக உள்ளது. போதிய தொழில் திறமை இல்லாத காரணத்தினால். 140 கோடி மக்கள் தொகையில். 65% மக்கள் உழைக்கும் வயதினராக இருந்தும் உரிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை,எனவே கல்லூரியில் பயிலும் போதே தொழில் நுட்பம் சார்ந்த திறன்களை மாணவ,மாணவிகள் வளர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,புதிய பட்டதாரிகள் தங்களின் தொழில் திறன்களை வளர்த்து கொள்ள “செய் மற்றும் கற்றல்” அல்லது “கற்று மற்றும் செய்” என்ற இரண்டு வகையான கற்றல் முறையை கையாள வேண்டும் என்று கூறினார்.விழாவில், பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற 16 மாணவ,மாணவிகளுக்கு, தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், இதே போல பல துறைகளைச் சேர்ந்த 369 மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *