வலங்கைமான் அருகில் உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் அறப்போராட்டம் அறிவித்திருந்த நிலையில் தாசில்தார் பேச்சு வார்த்தை நடத்திபோராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் 50வருட பழைய மின்கம்பிகள் மாற்றம் செய்ய வேண்டிய தெற்கு தெரு, கம்மாளர் தெரு, பாய்க்காரத் தெருகளுக்கு பதிய மின் மாற்றி அமைத்திட வும்.
ஜாஹுர் உசேன் தெரு, வெல்பர் நகர், கீழத்தெரு,
வெள்ளாளத் தெரு ஆகிய பகுதிகளில் புதிய மின் மாற்றி நிறுவவும், குறை மின்னழுத்தம் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்கள் புதிதாக மாற்ற வேண்டும், தாழ்வாய் தொங்கும் மின் கம்பிகளை சரி செய்ய கோரியும், கால்நடை மருத்துவ மனை அமைத்து தர வேண்டியும், கோவிந்தகுடி ஊராட்சியில் வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டியும், கள்ள மது விற்பனையை தடுக்க வேண்டும், நெடுவாசல் குக் கிராமத்திற்கு சுள்ளான் ஆற்றில் பாலம் அமைத்து தர வேண்டியும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17-ந்தேதி உண்ணாவிரதம் அறப்போராட்டம் அறிவித்திருந்த நிலையில் முதல் நாள் (16-ந்தேதி) தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் அன்பழகன் தலைமையில் சமாதானம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவிந்தகுடி ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் கோவி. ப. மணிகண்டன்,
ஒன்றியக் குழ உறுப்பினர் சீதாலட்சுமி மாரிமுத்து, ஊராட்சி மன்றத் துணை தலைவர்
பி. ஏ. எஸ். ரஹமத் அலி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காவல் துறை, கால்நடை துறை, மின்சார துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தருவதாகவும், மேலும் குறிப்பாக மின்சார துறை இன்னும் 10நாட்களுக்குள் கோரிக்கை வைத்த இடத்தில் புதிய மின் மாற்றி வைப்பதாகவும் உறுதியளித்தனர். ஆகவே உண்ணாவிரதம் அறப்போராட்டமானது தாசில்தார் மற்றும் மேற்கண்ட துறைகளின் வேண்டுகோளுக்கிணங்க உண்ணாவிரதம் அறப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *