ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

மேட்டூரில் இருந்து 13000ம் கன அடி விடிவித்த நிலையில் 15000 கன அடி நாளை முதல் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை பொறியாளர் உத்திரவாதத்தை ஏற்று காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.மறுக்கும் பட்சத்தில் டெல்டா முழுவதும் சாலை மறியல் போராட்டம்
பிஆர்.பாண்டியன் அறிவிப்பு

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் குருவை விதைப்பு பயிர்களை காப்பாற்ற 18 ஆயிரம் கன அடி தண்ணீரை உடன் விடுவித்திட வலியுறுத்திட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு துவங்கிய காத்திருப்பு போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது

முதல் கட்டமாக மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மற்றும் நீர்பாசனத்துறை, வேளாண்துறை அலுவாளர்களுடனான பேச்சுவார்த்தையில் 13000ம் கன அடி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளததாக தெரிவித்தனர். ஏற்க மறுத்து போராட்டம் தொடர்ந்தது

மாலையில் முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி அவர்கள் போராட்ட குழுவினரோடு தொலைபேசியில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், நாளை 28/06/2023 முதல் 15,000 கன அடியாக விடிவிக்க உறுதி அளித்ததை ஏற்று காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவதாகவும், மறுக்கும் பட்சத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுமையிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்

மேலும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்று ஜூன் மாதம் ஒதுக்கிடான 9.1 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்திடம் பெறவேண்டும்
உள் பாசன முறைகள் அமல்படுத்துவதை கைவிட வேண்டும்

கல்லணையில் இருந்து தலா 9 ஆயிரம் கன அடி வீதம் ெவண்ணாற்றிலும் காவிரியிலும் சுழற்சி முறையில் முறை பாசனம் அமல்படுத்த வேண்டும்
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆட்சியர்களோடும் விவசாயிகளுடனும் கலந்து பேசி நீர் பாசன முறைகளை செயல்படுத்த முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மாவட்ட ஆட்சியர் சென்னை கூட்டம் சென்றுள்ளதால் அவரது சார்பில் பேச்சுவார்த்தை ஈடுபட்டதோடு மனுவையும் உரிய முறையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார் என்றார்

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன்மாவட்ட தலைவர்
எம்.சுப்பையன்
மாவட்ட துணை செயலாளர் பொ.முகேஷ்.ஒன்றிய செயலாளர் கொரடாச்சேரி தர்மராஜ்திருவாரூர் அகஸ்டின்கோட்டூர் தெற்கு
எம்.தெய்வமணி
ஒன்றிய தலைவர்கள் திருவாரூர் அறிவு கோட்டூர் வடக்கு எஸ் வி கே சேகர்
தெற்கு எஸ் ராஜகோபால் உயர்மட்டக்குழு உறுப்பினர் கச்சனம் ரவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *