மன்னாடிமங்கலம் பொது பணிதுறை கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு.!!
தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயம்.என விவசாயிகள் குற்றசாட்டு.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் உள்ள பொதுபணி மற்றும் நீர்வளதுறை பராமரிப்பில் உள்ள கண்மாயில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து தென்னை வாழை பயிரிட்டு உள்ளதாலும் மடை. பாசன மற்றும் ஊத்து வாய்கால்கள் தூர்வராமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டு விவசாயிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்..


இப்பகுதியில் உள்ள கண்மாய் 199.5 ஏக்கரில் அமைந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 50. ஏக்கருக்கும் மேல் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து தென்னை வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரி ட்டு உள்ளனர்.. இதனால் கண்மாயில் நீரின் கொள்ளளவு குறைவதால். ஒரு போக நெல் சாகுபடியின் போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இக்கண்மாய் பாசனம் மூலம் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயம் நடக்கிறது. இந்நிலையில் கண்மாய் சர்வே செய்து ஆக்கிரமிப்பை அகற்றி தென் மேற்கு பகுதியில். கரைஅமைத்தும் மடை வாய்க்கால் மற்றும் வைகையாற்று ஊத்து கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துதுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சேகர் கூறுகையில், இக்கண்மாய் பாசனம் மூலம் நெல், வாழை உள்ளிட்ட விவசாயம் நடக்கிறது. முதல் மடையான பெரியமடை கால்வாய் தூர்ந்து போய் விட்டது. அவ்வப்போது விவசாயிகளால் சிமென்ட் பூசி பஞ்சர் பணி பார்த்து விவசாயம் செய்தோம்.

தற்போது வாய்க்கால் முழுவதும் சேதமாகி கிடக்கிறது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
இதுகுறித்து பா.ஜ. நிர்வாகி நாகுச்சாமி கூறுகையில், இப்பகுதியில் உள்ள வைகையாறு ஊத்து கால்வாய் முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் வைகையில் நீர் வரத்து காலங்களில் சுமார் 500 .மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கிறது..

அதேபோல .200. ஏக்கருக்கு பரப்பில் உள்ள நீர்வளத்துறை கண்மாயில் 50. ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்கின்றனர். உயர்நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி, பாதுகாக்க வேண்டும் எனும் உத்திரவை பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் காற்றில் பரக்க விட்டு மெத்தன போக்குடன் செயல்படுவதால். விவசாயம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.என தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *