நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மகளிர் (தன்னாட்சி) , விவேகானந்தா செவிலியர் கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை இணைந்து உலக போதைப் பொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி நடத்தினர்

இந்நிகழ்சியை நல்லூர் காவல் துறை செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

இந்த பேரணியானது கந்தம்பாளையம் நல்லூர் காவல் நிலையத்தில் தொடங்கி, கந்தம்பாளையம் அரசினர் மேல்நிலை பள்ளி வரை சென்று மீண்டும் காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது

இப் பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள் துறை தலைவர்கள் பங்கேற்றனர். இப்பேரணியில் மாணவிகள் போதை பொருள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர் .

மேலும் போதை பொருள் பயன்பாடுத்துவதல் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரகங்களை பொதுமக்களிடையே விநியோகித்தனர்.

இப்பேரணியில் விவேகானந்தா செவிலியர் கல்லூரி மாணவிகள் சுமார் 450 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர். மு. கருணாநிதி தலைமை தாங்கினார்.

மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி துணை மேலாண்மை இயக்குநர் டாக்டர். அர்த்தனாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர். ஸ்ரீராகநிதி அர்த்தனாரீஸ்வரன், துணைத் தாளாளர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகஇயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன், கல்லூரியின் திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் வெ .குமராவேல், கல்லூரிகளின் முதல்வர்கள் டாக்டர் பேபி ஷகிலா, டாக்டர் சுமதி தேர்வாணையாளர் டாக்டர் பத்மநாபன், மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளர் பேராசிரியர் ஸ்ரீதர் ராஜா செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *