கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக ரூ. 6,464 , குறைந்தபட்சமாக. ரூ.4,509,
சராசரி மதிப்பு ககுவிண்டாளுக்கு ரூ. 6,089 என்ற விலைகளுக்கு கொள்முதல்.

தஞ்சாவூர் விற்பனைக்குழு, செயலாளர் திருமதி மா.சரசு அவர்களின் தலைமையில், கும்பகோணம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மு.பிரியமாலினி மற்றும் மேற்பார்வையாளர் பா.பிரசாத் அவர்களின் முன்னிலையில் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைப்பெற்ற பருத்தி ஏலத்தில் கும்பகோணம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 2129 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 3640 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.

கும்பகோணம், பண்ரூட்டி, விழுப்புரம், குத்தாலம், சேலம்,தேனி சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர் பருத்தியின் மதிப்பு சராசரியாக 1.86 கோடி ரூபாய் ஆகும்.
இதில்தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6464/-குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.4509/-சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6089/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *