ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர்

திருவாரூர் மாவட்ட திட்டக்குழு தலைவராக தலையாமங்கலம் ஜி பாலசுப்பிரமணியன் அவர்களோடு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்து திட்டக்குழுவின் முதல் அறிமுக  கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

 திருவாரூர் மாவட்ட திட்டக்குழுவுக்கான தேர்தலில் போட்டியின்றி 12 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், திட்டக்குழு தலைவராக மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி. பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுகொண்டார். இந்த நிலையில் திட்டக்குழுவின் முதல் கூட்டம், திட்டக்குழு தலைவர் தலையாமங்கலம் ஜி பாலசுப்பிரமணியன் அவர்களின் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம் செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் திருத்துறைப்பூண்டி கே.மாரிமுத்து  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

அப்போது திட்டக்குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சேகர் கலியபெருமாள் இரா.சங்கர், அமுதா, சங்கீதா, முகமது உதுமான், ரமேஷ், ராணி, ராஜேஸ்வரி, ஷோபா, செந்தில்குமார் ஏ என் ஆர் பன்னீர்செல்வம் தமயந்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

கூட்டத்தில் முற்றிலும் விவசாயம் சார்ந்த மாவட்டமாக திகழும் திருவாரூர், மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் , தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆகியோரின் சொந்தமாவட்டமாக விளங்கும் பெருமைக்குரியதால் அரசின் அனைத்து திட்டங்களையும் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கமுழு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் , இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு செல்லும் முதலமைச்சர் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுதுணையாக இருந்து செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டில் திட்டக்குழு தேர்தலை நடத்தி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தானம் நகர்மன்ற தலைவர்கள்ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள்பேரூராட்சி தலைவர்கள் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *