எலிகளின் நடமாட்டத்தைகுறைக்க வயல் வரப்புகளில் புதினாக்கீரை செடிகளைநட வேண்டும். குடவாசல்
வேளாண் அதிகாரி விளக்கம்.

எலிகளின் நடமாட்டத்தை குறைக்க வயல் வரப்புகளில் புதினாக்கீரை செடிகளை நட வேண்டும் என்று குடவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எலிகள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றி இங்குள்ள சூழ்நிலைகளுக்கு நன்கு
பழகி விட்டன. எலிகள் பல்வேறு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் தன்மை கொண்டவை. கிடைக்கும்எந்த உணவையும் உண்ணக்கூடியவை. இனப்பெருக்கத்தில் சிறப்பு தன்மை பெற்றவை. வளரும் பற்களை குறைக்க வேண்டியிருப்பதால் எலிகள் எப்போதும் பொருட்களை கடித்துக்
கொறித்துக் கொண்டேயிருக்கும். எலி
களுக்கு கண்பார்வையை விட தொடு, கேள் மற்றும் மோப்ப உணர்ச்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. எலிகள் கூச்சம் நிறைந்தவை. எதையும் ஆராய்ந்து சோதிக்கும் தன்மை பெற்றவை.
எலிகளினால் உண்டாகும் சேதங்கள்:
நெல், கோதுமை, மக்காச்சோளம், சிறுதானியங்கள், கரும்பு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, தென்னை, பயறு வகைகள், பருத்தி, காய்கறிகள், பழ மரங்கள், கிழங்கு வகை பயிர்கள் ஆகிய பல பயிர்களையும் தின்று சேதப்படுத்துகிறது. தானிய சேமிப்பு களில் சிறுநீர், எச்சம் மற்றும் முடிகள் போன்றவற்றை விட்டுச் செல்வதால் மனிதர்களுக்கு சுகாதார கேடு விளைவிக்கின்றன. சேமிப்பு தானியங்களை தின்று அழிக்கின்றன. கோழிப்பண்ணை களில்
கோழிகளையும், முட்டை களையும், மாமிசக் கூடங்களில் மாமிசத்தையும் உண்டு
சேதப்படுத்துகின்றன. வசிப்பிடங்களில் தண்ணீர் குழாய்கள், மின்சாரக் கம்பிகள் போன்றவற்றைக் கடித்து சேதப்படுத்துகின்றன. தானியங்கள், உணவு தின்பண்டங்கள், காய்கறிகள் போன்றவைகளை தின்று அழிக்கின்றன.
விளைநிலங்கள், வீடுகள்
மற்றும் தானிய சேமிப்பு கிடங்குகளில் கரம்பெலி அல்லது வயலெலி,புல்லெலி,வெள்ளெலி, வயல் சுண்டெலி, கல்லெலி, கென்னெடி, பெருச்சாளி,
வீட்டெலி, வீட்டு சுண்டெலி, தென்னை எலி போன்ற சுமார் பத்து வகைகள் உள்ளன. இவற்றுள் வயலெலி அல்லது கரம்பெலி, புல்லெலி, வயல் சுண்டெலி ஆகிய மூவகை எலிகள் தான்
நெற்பயிர்களைத் தாக்கி
சேதப்படுத்துகின்றன. ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6அடி முதல் 8அடி உயரம் கொண்டT வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் ஆந்தைகளும் கோட்டான்களும் நிலத்திற்கு வரவழைக்க முடியும். மேலும் ஆந்தை மற்றும் கோட்டான் களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை மரப்பெட்டி கொண்டு செய்வதன் மூலம் நிலத்தில் இருக்கும் மரத்தின் உயரமான பகுதிகளில் வைப்பதன் மூலம் ஆந்தை மற்றும் கோட்டான்கள் அங்கு வந்து தங்கி தனது இனப்பெருக்கத்தை செய்யும் பொழுது உங்களுக்கு அதிகமான எலிகளை கட்டுப்படுத்த வசதியாக இருக்கும். வயல்களில் இருக்கும் களைகள் மற்றும் தேவை
யற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் எலிகள் வயல்களில் தெரியும் பொழுது அதனை பிடித்து அழிக்கவும் முடியும். வரப்புகளில் புதினாக்கீரை செடிகளை வளர்ப்பதன் மூலம் எலிகளின் நடமாட்டத்தை குறைக்க முடியும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *