நாமக்கல் மாவட்ட சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கம் சார்பில் கர்ம வீரர் கு காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா

நாமக்கல் மாவட்ட சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கம் சார்பில் கர்ம வீரர் கு காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா 2023 தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கம் சார்பாக கர்மவீரர் கு காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று கல்வி வளர்ச்சி நாள் விழா 2023 நடைபெற்றது

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சங்கத்தின் நிறுவனர் சபா சுப்பையன் நீலாம்பிகை தலைமை வகித்தார்

சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர் .எம்.சிவக்குமார் வரவேற்று பேசினார் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சட்ட ஆலோசகர் எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட துணை தலைவர் எஸ்.பி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்

சங்கத்தின் கோரிக்கை விளக்க உரையை மாவட்ட தலைவர் எஸ். திருவின்மணாளன் விளக்கி பேசினார்

மாநிலங்களவை உறுப்பினர் கே .ஆர்.என்.ராஜேஷ்குமார் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மழலைச் செல்வங்களுக்கு பரிசுகளை வழங்கினார்

தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர். மா. மதிவேந்தன் சிறப்புரையாற்றும்போது மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர்கள் கல்வித்துறைக்கு செய்து வரும் சாதனைகள் குறித்து விளக்கி கூறினார்

முன்னாள் தமிழக ஜஜனைமுதல்வர் மு. கருணாநிதி கல்விக்கு, கல்வி வளர்ச்சிக்கு பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார் குறிப்பாக கல்வி வளர்ச்சிக்கு உதவியாக சென்னையில் அண்ணா நூலகத்தை திறந்து வைத்தார் என்றும்

இன்று தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் மேலும் ஒரு மாபெரும் நூலகத்தை மதுரையில் இன்று திறந்து வைக்கிறார் என்றும் பேசினார்.

மேலும் திமுகவின் திராவிட மாநாடு ஆட்சியில் அறிஞர் அண்ணா கர்மவீரர் காமராஜர் கலைஞர் மு கருணாநிதி தற்போது மு க ஸ்டாலின் செய்தி வரும் சாதனைகளை மேற்கோள் காட்டி பேசினார் இறுதியில் மழலையர் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *