கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக பெய்துவரும் தொடர் மழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து நீர் பெருக்கெடுத்து ஓடியது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள அக்காமலை செக்டேம் பகுதியில் ஆற்றில் அடித்து வரப்பட்ட ஒரு கடமான் இன்று காலை உயிரிழந்து கிடந்ததுள்ளது

இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் படி வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேசன் ஆலோசனைக்கு இணங்க எஸ்டேட் வனவர் கணேசன் தலைமையில் உடனடியாக அப்பகுதிக்குச்சென்ற வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், மற்றும் நகராட்சி பணியாளர்கள் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் கடமானை அப்பகுதியிலிருந்து அகற்றி மேல் நடவடிக்கை மேற்கொண்டனர்

மேலும் அக்காமலை செக்டேம் பகுதியை தூர்வாரி அணையை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைத்தால் குடிநீரில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் பாதுகாக்க ஏதுவாக இருக்கும் என்றும் அதற்கான நடவடிக்கையை காலதாமதமின்றி மேற்க் கொள்ள சம்பந்தப்பட்ட நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உடனிருந்த 12 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இ.ரா.சே.அன்பரசன் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *