நாமக்கல்

தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றதிலிருந்து தனியார் எலக்ட்ரானிக் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதில் தமிழ்நாடு தற்போது முதலிடம் பிடித்திருக்கிறது பாராளுமன்ற மாநிலங்கள் உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் பேச்சு

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், நாமக்கல் கிளை வளாகத்தில் ஒரே நேரத்தில் 200 பணியாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் நவீன வசதிகளுடன் போக்குவரத்து துறை பணியாளர்களுக்கான ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையினை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில் திறந்து வைத்து, போக்குவரத்து துறை பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வுகளில் நாமக்கல் நகர் மன்றத்தலைவர் கலாநிதி, நிர்வாக இயக்குனர் ஆர்.பொன்முடி அருள்முருகன், கோட்ட மேலாளர் எம்.சுரேஷ் பாபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்து நாமக்கல் சேலம் சாலையில் உள்ள ஆறாவது வார்டு திமுக செயலாளர் வடிவேல் குமார் ஏற்பாடு செய்திருந்த மறைந்த முதல்வர் மு கருணாநிதியின் நூறாவது ஆண்டு விழா கொடியேற்று விழாவில் கலந்துகொண்டு 100 அடி உயரமுள்ள திமுக கொடிமரத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து கே ஆர் என் ராஜேஷ்குமார் எம்பி உரையாற்றினார் அப்போது அவர் பேசும் பொழுது தற்போது தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் வெற்றி பெற்று பதிவேற்ற பிறகு தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பில் இந்தியாவிலேயே முதலிடம் பிடிக்கின்ற அளவுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து தமிழ்நாடு தனியார் எலக்ட்ரானிக் தொழில் துறை வேலைவாய்ப்பு முன்னேறி இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக அப்போது கே .ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி தெரிவித்தார்

இதைத்தான் சொல்லவில்லை என்றும் இந்தியா டுடே பத்திரிகை ஒரு சர்வேயில் இதை குறிப்பிட்டு எழுதி இருப்பதாகவும் அவர் அப்போது கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *