கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

திருவலஞ்சுழி ஊராட்சியில் கிராம சபாக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் CPML மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கும்பகோணம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், திருவலஞ்சுழி கிளைச் செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு திருவலஞ்சுழி ஊராட்சிமன்ற தலைவரிடம் ஊராட்சியின் மக்கள் தீர்மானமாக நிறைவேற்ற கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

அதில் இருப்பதாவது…..

(1)ஆரம்ப சுகாதார நிலையம் கொடுக்க கோரிக்கை (2) திருவலஞ்சுழி அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் கோரிக்கை (3)100 நாள் வேலை செய்யும் அனைத்து பொதுமக்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு வேலையில்லா காளப்பாடி முழு ஊதியமாக வழங்கப்பட வேண்டும் கோரிக்கை (4) அனைத்து மேல் நீர் தேக்க தொட்டி இடியும் நிலையில் உள்ளதால் அனைத்தையும் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித் தரவும் கோரிக்கை(5) ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு ஊராட்சி பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் தீர்மானம்(6) மணப்படையூர் திருவலஞ்சுழி சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் உயர் மின்விளக்கு அடி பம்பு அமைத்து தர கோரிக்கை(7) இல்லாத ஏழைகள் இறுதி சடங்கிற்கு பயன்பெறும் வகையில் இறுதி ஊர்வலம் ஊர்தி அமைத்து தர கோரிக்கை (8) ஏழை மக்களுக்கு இலவச திருமண மண்டபம் கட்டித்தர வேண்டும் கோரிக்கை (9) இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *