விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதி காலவாய் பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அரசு பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மாணவ,மாணவிகளுக்கு டிபன் பாக்ஸ்,வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன…

நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்டம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட குணியமுத்தூர் காலவாய் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சுதந்தி்ர தின விழா நடைபெற்றது.பைசல் தலைமையில் நடைபெற்ற இதில் இரும்பு கடை அக்கீம்,முகம்மது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

சிறப்பு விருந்தினர்களாக கோவை வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார்,செயலாளர் ராஜ்குமார்,மற்றும் நிர்வாகிகள் ராம்குமார்,ப்ரியமுடன் உண்ணி,ராம்ஸ்,விஜய்,விக்னேஷ் ஆகியோர் கலந்து கேக் வெட்டி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி ,நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியை தேசிய கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக , ,இந்தியன் வுட்ஸ் அருட்செலவர் குப்புராஜ் கலந்து கொண்டார்.விழாவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு டிபன் பாக்ஸ்,வாட்டர் பாட்டில் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன.

இதே போல சுகுணா புரம் அரசு பள்ளிக்கு தூய்மை செய்ய தேவையான உபகரணங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில்,ரபீக், மெர்சல் செந்தில்,மகேந்திரன்,கார்த்திக், சந்தோஷ்,,நிஷாந்த்,,ரமேஷ் குமார்,மகளிர் அணி ஜீனத் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *