உலக மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் இன் ஹவுஸ் மெடிகேர் சார்பாக முதியோருக்கு முதல் வணக்கம் எனும் உதவி அலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டது…

கோவை ராம்நகர் பகுதியில் இன் ஹவுஸ் மெடிகேர் எனும் முதியோர்களுக்கான பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகின்றது.தற்காலிக மற்றும் நிரந்தரமாக முதியோர்களை பராமரிப்பதற்கான மருத்துவ வசதி,உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட இம்மையத்தில், மூத்த குடிமக்களுக்கான தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கான பிரத்யேக அலைபேசி எண் அறிமுக விழா இன் ஹவுஸ் மெடிகேர் பராமரிப்பு மைய வளாகத்தில் நடைபெற்றது.

முதியோருக்கு முதல் வணக்கம் என்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு 9626332220 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்தார்.

தமிழகத்திலேயே முதன் முறையாக புதுமை திட்டமாக துவங்கியுள்ள இது குறித்து இன் ஹவுஸ் மெடிகேர் மையத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹசீப் கான் கூறுகையில்,கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த முதியோர் பராமரிப்பு மையத்தை நடத்தி வருவதாக கூறிய அவர்,வயதான காலத்தில் மருத்துவ வசதி மட்டுமின்றி மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆதரவும் தேவைப்படுவதாக கூறினார்..

இது போன்று முதியோர்களுக்கான அனைத்து சேவைகளையும் வழங்குவதாக கூறிய அவர், இங்கு வாத நோய்,எலும்பு முறிவு போன்ற நோய்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்தாலும்,அவர்களது வாழ்வில் மீண்டும் தானாக இயங்க உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி வழங்குவதாக தெரிவித்தார்.

தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ள அலைபேசி எண்ணில் கோவையில் வசித்து வரும் மூத்த குடிமக்கள் எந்த விதமான உதவியையும் இந்த எண்ணை தொடர்பு கொண்டால் பெற முடியும் என தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *