ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வடுவூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நேரில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வடுவூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை அரசு முதன்மை செயலாளர் .ககன் தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ உடனிருந்தார்.
பின்னர் அரசு முதன்மை செயலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
இன்றைய தினம் (21.08.2023) மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வடுவூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனைகள் மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்னார்குடி மருத்துவமனையில் புதிய. யூனிட் கட்டடம் கட்டுவதற்காக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியட்டுள்ளார்கள் அந்த பணி விரைவில் துவங்க எங்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும், திருவாரூர் மாவட்டத்தின் இதர இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பல இடங்களில் கட்டுவதற்கு அரசு சார்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சில இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகபடுத்திட தற்பொழுது சிறப்பு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் கலந்தாய்வு முடிந்தப்பிறகு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும் புதியதாக முதுநிலை படிக்கும் மாணவர்களை முதற்கட்டமாக நியமனம் செய்யப்படவுள்ளது. அடுத்த மாதம் செப்டம்பர்-10ம் தேதிக்குள் மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலுள்ள மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மாநிலம் முழுவதும் மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.
ஆய்வில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மாநில கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் மருது துரை சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் செல்வகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் ஹேமசந்த்காந்தி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கீர்த்தனா மணி, வட்டாட்சியர் .கார்த்தி உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *