நாமக்கல்

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், இராசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர் -மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெ.குமரகுருபரன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா முன்னிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமைக்கப்படும் பொருள் வைப்பறை மற்றும் சமையலறையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, வேலூர் பேரூராட்சி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, சமையலறை, அறுவை சிகிச்சை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார் மேலும், மருந்துகள் இருப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, வேலூர் பேரூராட்சியில் 24 மாணவர்கள் தங்கியுள்ளஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் பொத்தனூர் பேரூராட்சி, வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ள இரண்டு கூடுதல் வகுப்பறைகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 25 மெட்ரீக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிடங்கி, ஊரக கிடங்கி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சேமித்து வைக்கப்படும் வேளாண் விளைப்பொருட்கள் அதற்கு வழங்கப்படும் ஆதர விலை, ஏல முறை நடவடிக்கைகள் குறித்து வேளாண் அலுவலரிடம் விரிவாக கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் கள ஆய்வு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, ஒன்றிய அளவில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் தொடர்ந்து, பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், நாமக்கல் நகராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு ஓட்டுநர் உரிமம், போக்குவரத்து ஆவண சான்றுகள், வாகன பதிவு உள்ளிட்டவை வழங்கப்பட்ட விபரங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விரிவாக கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார்,நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் .மா.பிரியா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துணை இயக்குநர் நாசர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) .முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *