கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ. முகேஷ்

கிருஷ்ணகிரியில் தவாக செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் தங்கம் சக்திவேல் தலைமை வகித்தார் நகர இளைஞரணி செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார் நகர மாணவரணி செயலாளர் மனோ வரவேற்றார்

இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் சனாவுல்லா மாவட்ட பொருளாளர் ஆர்சி அருன் மாவட்ட துணை தலைவர் ஞானவேல் மாவட்ட துணை செயலாளர் அன்பழகன் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார்  தொண்டரணி மாவட்ட செயலாளர் சபரி இளம்புயல் பாசறை மாவட்ட செயலாளர் மாது தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மன்னன் வேப்பனப்பள்ளி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்த்திக் வேப்பனப்பள்ளி ஒன்றிய இளம்புயல் பாசறை செயலாளர் பாலகிருஷ்ணன்  கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் முகமது தபரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்

கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகரில் உள்ள 33 வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் சூளகிரி தாலுகாவில் இயற்கை வளங்களை கொள்ளை போவதை தடுக்க நிறுத்த வேண்டும். மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *