வலங்கைமான் அருகே உள்ள அவளிவநல்லூர், பெருங்குடி, ஹரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயலை வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அவளிவ நல்லூர், பெருங்குடி, அரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயலை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர்கள் தனுஷ்கோடி, கருணாகரன் ஆகியவுடன் வலங்கைமான் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்து, நெல் வயலில் பாசிகளில் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்

வழிமுறைகள் குறித்து கூறியதாவது:-
நெற்பயிருக்கு இடப்படும் உரங்களை பாசிகள் எடுத்துக்கொண்டு நெற்பயிரை விட வேகமாக வளரும் ஆற்றல் கொண்டது. மேலும் படர்ந்து கொண்டு நெற்பயிருக்கு தேவையான காற்றோட்டம் தடைப்பட்டு பயரின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

நாற்றங்கால், நேரடி நெல் விதைப்பு, நடவு வயல்களில் குறிப்பாக களர் மற்றும் உவர் நிலங்களில் அடி உரமாக பாஸ்பேட் உரங்களான டி ஏ பி, கலப்பு உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் அதிகம் பயன்படுத்தப்பட்டால் பாசி மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாகி நாற்றுக்கள் கருகும் நிலை ஏற்படும். நாற்றங்கால் மற்றும் வயல்களில் அதிகப்படியான நீர்த்தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் குழாய் அமைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

பாசி அதிகம் படர்ந்து உள்ள வயல்களில் கோனோ வீடர், ரோட்டரி வீடர், பவர் வீடர் போன்ற களை எடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி களை உடன் நிலத்தில் மடக்கி உழ வேண்டும். உப்பு நிறைந்த ஆழ்குழாய் தண்ணீரை பயன்படுத்தும் போது வயல்களில் குட்டை அமைத்து நீரை தேக்கி வைத்து பின்னர் நாற்றங்கால் மற்றும் வயல் பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

ஏக்கருக்கு ஒரு கிலோ மயில் துத்தம் (காப்பர் சல்பேட்) 10 கிலோ மணலுடன் கலந்து நெல் வயலில் வாய் மடையில் சாக்கு பையில் இட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் (அல்லது) வயலில் நீரை வடிகட்டிய பிறகு சைபர் 0.5 சதம் மயில் துத்த கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும் பாசிகள் தென்பட்டால் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் மேலும் ஒருமுறை தெளித்து நெற்பயிரை பாசியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். வயல் ஆய்வின் போது உதவி வேளாண் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *